- தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.இதனால் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு மே மாதம் வரை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது.
- நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், பிசிசிஐ முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பைகான போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் பயோ பபுள் சூழலுக்குள் வைத்து பிறகு போட்டியை நடத்தி முடித்தார்கள் .
- தற்போது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லி,மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது .
- இதனால் மாநிலங்களுக்கு இடையே நடத்தப்படும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் இந்த ஆண்டு மே மாதம் இறுதிவரை ரத்து செய்ய வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் சுற்று அறிக்கை அனுப்பியுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
- கிரிக்கெட் போட்டிகளை அனைத்து வயதினருக்கும் நடத்துவது தான் நமது விருப்பமாக இருந்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவருவதால் ஜூனியர் மட்டத்திலான அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்கிறோம்.
- நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் போட்டிகளை நடத்துவதற்கு மாநிலங்களுக்கு இடைய போக்குவரத்து, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், வீரர்களை பயோ பபுள் சூழலில் பாதுகாத்து வைத்தல் போன்றவை செய்யப்படுத்த வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழல் அதற்கு ஏற்றதாக இல்லை.
- பிசிசிஐ அமைப்பால் நடத்தப்பட்டு வரும் சீனியர் மட்டத்திலான வீரர், வீராங்கனைகளுக்கு ஆன கிரிக்கெட் போட்டிகள் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது தான். 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான போட்டி கூட முன்பு அறிவிக்கப்பட்டவைதான்.
- தற்போது உள்ள சூழலில் 16 வயதுக்குட்பட்ட மற்றும் 23 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தக்கூடிய சூழல் இல்லாததால், அனைத்துப் போட்டிகளும் இந்த ஆண்டு மே மாதம் இறுதிவரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் கூச் பெஹர் கோப்பை,வினு மன்கட் கோப்பை போன்றவை நடத்தப்படாது.
- தற்போது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நடக்க உள்ளது. இதனால் இளம் வீரர்கள் தங்கள் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய வீரர்களின் உடல்நலன்களை பாதுகாப் பது தான் நமது முதன்மைக் குறிக்கோள்.
- ஐபிஎல் டி20 போட்டித் தொடர் முடிந்தபின் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார்.