அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது, மேலும் அனைத்து வங்கி ஊழியர்களின் நலன்களும் கவனிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.
மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று கூறினார்.
மேலும் வங்கிகள் தனியார் மயமாக்குவது என்ற முடிவு திட்டமிட்ட ஒன்று தான் என்றும், எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார்மயமாக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
தனியார் வசம் தரப்படும் வங்கிகளைப் பொறுத்தவரையில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரின் நலனும் காக்கப்படும் என்றும் எந்தச் சூழலிலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் நிர்மலா சீதாராமன்
உறுதியளித்துள்ளார்.
கடந்த மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி மத்திய அரசு பட்ஜெட்டின் போது பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மக்களின் சேமிப்பு பணம் அனைத்தும் வங்கிகளில் இருப்பதாகவும், அவற்றை தனியாருக்கு விற்பது நியாயமில்லை எனவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் கூறினார்கள்.