- Advertisement -
Homeசெய்திகள்இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யும் ஐந்து முக்கிய தலைவர்கள்

இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யும் ஐந்து முக்கிய தலைவர்கள்

- Advertisement -

தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் சூழலில் தமிழக அரசியல் களத்தின் முக்கிய தலைவர்கள் இன்று பரப்புரையை தொடங்கவுள்ளதால் இன்னும் அனல் பறக்க உள்ளது. இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து, பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார்கள்.

முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பழனிசாமி எடப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணி அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார்.

அதனை தொடர்ந்து, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

3 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.அதன் தொடர்ச்சியாக, அதே தொகுதியில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

கோவில்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -