9 ,10,11ம் வகுப்பு வரையிலும் அனைத்து மாணவ – மாணவிகளும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
- தமிழகத்தில், கொரோனா பரவலால், இந்த ஆண்டு துவங்கியும், 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது , ஜனவரி, 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், பிப்.,8 முதல், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின. வாரத்தில் ஆறு நாட்கள் மட்டும் , பாடங்களை நடத்தி முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில்,மே, 3ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
- 10, 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கபடவில்லை , தேர்வு நடாக்கும ,என, மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில், இன்று (பிப்.,25) சட்டசபையில் முதல்வர் பழனிசாமி, விதி எண் 110ன் கீழ் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதில், பொதுத்தேர்வு இல்லை 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவித்தர் . கடந்தாண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்க
ஓய்வு வயது அதிகரிப்பு:
அதேபோல், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரித்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார் . தற்போது ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில், அதனை 60 வயது ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.