கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேலைபார்க்கும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கி உள்ளார். இதில் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க உத்தரவிட்டு இருந்தார்.
இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மற்றும் பணிகளை எட்டு வாரத்திற்குள் முடித்துவிட தமிழக அரசு உத்தரவிடவேண்டும் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.