இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிகர் கதிரிக்கு அப்பாவாக நடித்த தங்கராசுவின் நிலைமையை பார்ப்போம்.
நாட்டுப்புற கலைஞரான தங்கராசுவின் திறமையை அறிந்த மாரி செல்வராஜ், இவருடைய முதல் படத்திலே தங்கராசுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். இந்த படம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பெரும் வெற்றியை தேடித்தந்தது,இருந்தாலும் தங்கராசுவின் நிலைமை மாறவில்லை. இவர் வசிக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாத நிலைமையில், அவதிபடுக்கிறார் . இதை அறிந்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்க்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.
தங்கராசு சுமார் 40 ஆண்டுகளாக பெண்வேடம் அணிந்து நாட்டுப்புற கலைஞராக நடித்தவர். இவர் தன் மனைவி பேச்சிக்கனியுடன் மிகவும் சேதமடைந்த கூரை வீட்டில் வசித்து வருகிறார்.இந்த வீடு நெல்லை வண்ணாரப்பேட்டையில் இளங்கோ நகரில் உள்ளது. இவருடைய வீட்டுக்கு கதவு, மின்விளக்கு எதுயும் இல்லாதால் டீச்சர் டிரைனிங் முடித்த தனது மகளை சொந்தக்காரங்க வீட்டில் இருந்து M.A. அஞ்சல் வழியாக படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
பொதுவாக நாட்டுப்புற கலைஞர்கள் வேறு தொழில் செய்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும். தங்கராசும் பனங்கிழங்கு ,எலுமிச்சை ,வெள்ளங்காய் போன்றவைகளை விற்று பிழைத்து கொண்டுயிருந்தார். கொரோனாவால் இந்த பழ விற்பனையும் நின்றுவிட்டது. இப்பொழுது பணமிருந்தால் ஒரு வேளை சாப்பாடு இல்லையென்றால் கூழ் குடித்து வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.
தங்கராசு தனது 17 வயத்திலிருந்து தெருக்கூத்தாடி தனது மகளை படிக்க வைத்ததாக கூறுகிறார். சமீபத்தில் பெய்தமழையால் என் வீடு சேதமடைந்து விட்டது என்றும் என்னால் வீடு கட்டமுடியவில்லை எனக்கு வீடு கட்டிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறுகிறார். இதை ஏற்று மாவட்ட ஆட்சியர் விஸ்ணு அவர்கள் தாசில்தார் ஒருவரை அனுப்பி தங்கராசு வீட்டை ஆய்வு செய்து சரி செய்வதோடு, அவரின் மகளுக்கு அரசு வேலை தருவதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்