தும்பைப்பூவின் சாற்றை வைத்து குளிர்காய்ச்சல், தலைவலி போன்றவற்றை குணப்படுத்த முன்பெல்லாம் எதாவது ஒரு நோய் என்றால் டாக்டரிடம் செல்லலாம் இயற்கையாக கிடைக்கும் பூ, இலை, காய் போன்றவற்றை வைத்து குணப்படுத்துவார்கள். இப்பொழுது இதை எல்லாம் செய்தால் தீராத நோய்கள் கூட குணமாகும்.
- தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து மூக்கின் வழியாக இரண்டு சொட்டு விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலியும் தீரும்.
- எந்தவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ ஒரு அருமருந்தாகும். தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினமும் ஒரு டீஸ்புன் அளவு இரு வேளை குடித்துவந்தால் காய்ச்சல் குணமடையும்.
- பொன் வறுவல் மிளகு, தும்பைப்பூ, வெல்லம் ஆகிய மூன்றும் சேர்த்து லேகியம் போல செய்து இருவேளை தினமும் சாப்பிட்டுவர குளிர் காய்ச்சல் வாதைஜுரம் குணமடையும்.
- பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு தும்பைப்பூ சாற்றை மூக்கில் விட்டால் மயக்கம் தெளியும் அதற்கு பிறகு வைத்தியம் பார்க்கவும்.
- தும்பைப்பூவை ஒரு பாத்திரத்தில் வதக்கி தேனும் சேர்த்து தினமும் ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டுவந்தால் கண் தொடர்ப்புடைய நோய்கள் குணமாகும்.