வெள்ளை மாளிகையில் அதிபர் உரை எழுத்தாளர் பணி ஒரு தனித்துறையாகும். இத்துறையின் வேலை உரையை ஆராய்ச்சி செய்வதும், உரையை எழுதுவதுமாகும்.
இன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு பதவி ஏற்க இருக்கும் அமெரிக்காவின் 46வது அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸ்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அதிபராகும் ஜோ பைடனின் ஆவலாக காத்திருக்கும் நேரத்தில் அந்த உரையை எழுதியவர் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
இந்த உரை 20 – 30 நிமிடங்கள் நீடிக்கும் அந்த உரை அமெரிக்காவின் எதிர்காலத்திக்காக ஜோ பைடன் வைத்திருக்கும் திட்டங்கள் என கூறப்படுகிறது.
ஜோ பைடன் துணை அதிபர் பதவியில் இருந்தபோது அவருக்கு உரை எழுத்தாளராக வினய் ரெட்டி இருந்ததது குறிப்பிடத்தக்கது. வினய் ரெட்டி ஓஹியோ மாகாணத்தில் டெய்டன் நகரில் வளர்ந்தவர்.
அமெரிக்க அதிபருக்கு உரை எழுத்தராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நியமிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் துணை அதிபராக பொறுப்பேற்கும் கமலா ஹாரிஸ், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.