முட்டை ஒரு புரோட்டின் நிறைந்த உணவு. இதை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை சாப்பிடுகிறார்கள். அந்த முட்டை நல்ல முட்டையா?அல்லது கெட்டுப்போன முட்டையா? என்று பார்க்கலாம்.
முன்பெல்லாம் முட்டையை காதுக்கிட்ட குலுக்கும்போது சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று சொல்வார்கள், அல்லது உடைத்து பார்க்கும்போது மஞ்சள் கரு சிதறிய நிலையிலோ, கலங்கிய நிலையிலோ இருந்தால் அது கெட்டுப்போன முட்டை என்பார்கள்.
இப்பொழுது நீங்க ஒரு டம்பளரில் தண்ணீர் நிரப்பி அதனுள் முட்டையை மெதுவாக போடவும், முட்டை முழுவதுமாக மூழ்கி டம்பளரில் அடிப்பகுதியில் தங்கினால் அது புதிய முட்டை.
டம்ளருக்குள் ஒரு பக்கமாக சரிந்த நிலையில் இருந்தால் ஒரு வாரம் ஆகிவிட்டது என்று அர்த்தம்.நன்றாக சாய்ந்தநிலையில் மிதந்துகொண்டிருந்தால் 2 அல்லது 3 வாரம் பழைய முட்டை என்று அர்த்தம்.
ஆனால் தண்ணீருக்குள் போட்டதும் மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை பழையது அல்லது கெட்டுப்போனது என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை தவிர்ப்பது நல்லது.
நிறைய பேர் முட்டையை பிரிட்ஜியில் வைத்து உபயோகிப்பார்கள். அடிக்கடி பிரிட்ஜ் கதவை திறந்து மூடும்போது வெளிப்பகுதியில் உள்ள வெப்பநிலையும் உள்பகுதியில் உள்ள வெப்பநிலையும் எதிர்மறையாக பாதிக்கும். அதிக நாட்கள் முட்டையை சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்குள் உபயோகிப்பது நல்லது.
நாளாக நாளாக முட்டைக்குள் இருக்கும் காற்று விரிவடையும். முட்டைக்குள் இருக்கும் நீர்பரப்பை காற்று நிரப்பிவிடும். அதனால் முட்டை மிதக்க தொடங்கும். முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சி அடைய தொடங்கிவிடும். அதனை உட்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும். அதனால் நல்ல முட்டையா என்று பார்த்து உண்பது நல்லது.