சில வேடிக்கையான மூளை டீஸர்களுடன் ஓய்வெடுக்க சிறிது இடைவெளி வேண்டுமா? எல்லா காலத்திலும் சிறந்த புதிர்களின் எங்கள் இறுதி பட்டியலைப் பாருங்கள்.
அவை எளிதாகத் தொடங்குகின்றன, மேலும் சில குழந்தைகளுக்கு சரியான புதிர்கள். இருப்பினும், மற்றவை கடினமானவை மற்றும் நீங்கள் ஒரு கணித அறிவாளியாக இருக்க வேண்டும். பல கடிதங்கள் மற்றும் வார்த்தைகளில் நாடகங்கள், எனவே நீங்கள் கவலைப்படவில்லை என்றால் தொடரவும். உங்களைத் தொடர நாங்கள் சில வேடிக்கையான புதிர்களைக் கூட வீசினோம். இப்போது, நீங்கள் இறுதியில் அதைச் செய்தால், மீதமுள்ளவற்றை நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால் ஜாக்கிரதை: கடினமான புதிர்கள் உங்களை சோதனைக்கு உட்படுத்தும்
விடுகதைகள்
1.தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார் ?
தலையணை
2. காலடியில் சுருண்டிருப்பாள் கணீர் என்று குரலிசைப்பாள் அவள் யார் ?
மெட்டி
3. அடி மலர்ந்து நுனி மலராத பூ அது என்ன ?
வாழைப்பூ
4. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை அது என்ன ?
தலை வகிடு
5. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
சித்தரத்தை
6. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?
மொடக்கத்தான்
7. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் அது என்ன?
இளநீர்
8. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது அது என்ன?
புடலங்காய்
9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
நிழல்
10. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
சீப்பு
11 ஓடுவான், வருவான்; ஒற்றைக் காலில் நிற்பான். அவன் யார்?
கதவு,
12. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்து. அது என்ன?
வெண்டைக்காய்,
13. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?
தேங்காய்,
14. எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?
நெருப்பு,
15. ஊர் முழுவதும் சுற்றுவேன். வீட்டுக்குள் நுழைய மாட்டேன். நான் யார்?
செருப்பு,
16. மஞ்சள் குருவி ஊஞ்சலாடுது. அது என்ன?
எலுமிச்சை
17. உடம்பு முழுவதும் முள். அது என்ன?
சீப்பு,
18. கையும் இல்லை, காலும் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பேன். நான் யார்?
நேரம்,
19. வெள்ளை மணலுக்குள்ளே தங்கம். அது என்ன?
முட்டை,
20. பச்சைப் பேருந்துக்குள் சிவப்பு பயணிகள். அவர்கள் அணியும் தொப்பி கறுப்பு. அது என்ன?
தர்பூசணி,
21. உன்னை எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான். அது யார்?
நிழல்
22. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
உள்ளங்கையும் விரல்களும்
23. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
வாழைப்பழம்
24. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
செத்தல் மிளகாய்
25. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது அது என்ன?
சங்கு
26. தட்டச் சீறும் அது என்ன?
தீக்குச்சி
27. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
தையல் ஊசியும் நூலும்
28. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
நிழல்
29. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
நத்தை
30. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்
வழுக்கை
31. ஆழ் குழி தோண்டி, நீள விதை விதைத்து, விளைந்தது எல்லாம் மண்ணு தான் அது என்ன?
பிணம்
32. இரண்டு வீட்டுக்கும் ஒரே முற்றம் அது என்ன?
மூக்கு
33. வாய்க்க வெட்டி வரப்பு வெட்டி வைச்சது ஆயிரம் (1000) கப்பலேறி கணக்கு பகிர்ந்தால் முப்பதாயிரம் (30,000) அது என்ன?
வெங்காயம்
34. பிணம் வேகுது ஆனால் துணி வேகல அது என்ன?
இட்லி
35. எழும்பு இல்லாத மனிதன் கிளை இல்லாத மனதில் ஏறுகிறான் அது என்ன?
பேன்
36. சாலுக்குள்ள (கூரை வீடு) செவ்வள பிள்ளை அது என்ன?
நாக்கு
37. கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அது என்ன?
பூட்டு
38. ஓடுறான், ஓடியாறான் ஒத்த காலில் நிக்கறான் அவன் யார்?
கதவு
39. கல்லாலும்,மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு அது என்ன?
தூக்கிணான் குருவி கூடு
40. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?
வெண்டைக்காய்