அம்மா
- முதலில் நான் பேசி பழகியதும்
உன் பெயர் தான்…!
முதலில் நான் எழுதி பழகியதும்
உன் பெயர் தான்…!
…::அம்மா::…
பொக்கிஷம்
- அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.
தொலைந்து போன பின் தேடாதே.
அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.
அன்னையின் அன்பு…!
உறவுகள்
- பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.
அன்புக்கு இணை ஏதும் இல்லை
- தன் உடல் மூலம் உடல் தந்து,
உதிரத்தை உணவாக தந்து,
உயிருக்கு உணர்வுகளையும்
தந்தவள் தாய்…!
உன் போல் யாரும் இல்லை.
உன் அன்புக்கு இணை ஏதும் இல்லை.
தாய்க்கு மகிழ்ச்சி
- கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டால்
மனைவிக்கு மகிழ்ச்சி…!
என்ன வேண்டும் என்று கேட்டாலே
போதும் தாய்க்கு மகிழ்ச்சி…!
அகிலமே போற்றும்
- அள்ள அள்ள குறையாதது எது..?
அமுதசுரபியா..?
இல்லை, அகிலமே போற்றும்
“அம்மாவின் அன்பு”.
அன்பு என்றாலே
- ஆயிரம் முறை காயப்படுத்தினாலும்
திரும்பி ஒரு முறை கூட
காயப்படுத்தாத உறவு அம்மா…!
அன்பு என்றாலே அம்மா தான்…!
ஒரே கடவுள்
- செய்த குற்றங்கள் அனைத்தையும்
மன்னிக்கும் ஒரே கடவுள்.
அம்மா…!
மூன்றெழுத்தே
- அம்மாவுக்கு என்று
தனியாக கவிதை வேண்டாம்.
அம்மா என்ற மூன்றெழுத்தே கவிதை தான்.
அன்பாக பழகிப்பார் அம்மாவும் கவிதை தான்.!
தமிழ் தாய்
- கவிதை எழுதுவது
பெண்ணுக்காக அல்ல.
என் தமிழுக்காக,
என் தமிழ் தாய்க்காக
”தமிழ் தாய்”
அவளும் பெண் தானே…!