வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு

Pradeepa 46 Views
1 Min Read

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரேம், லீலாவதி, ராஜேஸ்வரி, செல்வராஜ், சிராஜ் உள்ளிட்ட 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் 7 பேரின் மரணத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று விளக்கமளித்தார். உயிரிழந்தவர்கள் உடல் ரீதியான பிரச்சனை உள்ளவர்கள் என்றும், அதில் சிலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் கூறினார். மேலும், பொது பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நோயாளிகளில் 3 பேர் திடீரென உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்தார் பின்னர், 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

Share This Article
Exit mobile version