இன்று அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடக்கம்

Selvasanshi 15 Views
2 Min Read

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கயுள்ளது.

4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்காக சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்தில் 4 நுழைவு வாயில்களும் , 11 ஆடுகளங்களும் உள்ளன.

8 செ.மீ. வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாமல், உடனடியாக மழை நீரை உறிஞ்சி வெளியேற்றும் அளவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் நிழல் விழாத அளவுக்கு பிரத்யேக எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் அருகிலேயே உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி, பிரம்மாண்ட உணவகம், மினி 3டி திரையரங்கம், நீச்சல்குளம் ஆகியவை உள்ளன.

மேலும் இங்கு 6 உள்ளரங்க ஆடுகளங்களும், அவற்றில் பவுலிங் மெஷின்களும் அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர்கள் தங்குவதற்காக 50 டீலக்ஸ் அறைகளுடன் க்ளப் ஹவுசும் இந்த வளாகத்தில் உள்ளது.

பேர்ஸ்ட்டோவ், ஸேக் கிராவ்லி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ளனர். ஷாபாஷ் நதீமிற்கு பதிலாக உமேஷ் யாதவ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர் யார் என்பதை தீர்மானிக்கவுள்ளது.

அதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த போட்டியை காணயுளார்கள். கொரோனா, நோய் தடுப்பு நடைமுறை காரணமாக 55,000 ரசிகர்கள் மட்டும் இப்போட்டியை காண அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் கடைசி இரு டெஸ்ட் போட்டிகள் முழுவதும் புதிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில், அகமதாபாதில் இந்த இரு அணிகளின் சராசரி ஸ்கோர் 382 என வரலாறு கூறுகிறது.

Share This Article
Exit mobile version