டோக்கியோவில் நாளை தொடங்குகிறது 32 வது ஒலிம்பிக் போட்டி

2 Min Read

கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே 32வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை கோலாகலமாக அரங்கேறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஓராண்டிற்கு பிறகு இப்போது நடத்தப்படுகிறது. அதுவும்கொரோனா பரவல் அச்சத்தால் ரசிகர்கள் இன்றி நடத்தப்படுகிறது.

ரசிகர்கள் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க விழாவை ஜப்பான் மன்னர் நருகிடோ உட்பட உலக நாடுகளை சார்த்த முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மிக முக்கியமான பிரமுகர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிக்காக பல்வேறு மாகாணங்கள் வழியாக கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் ஜோதி டோக்கியோ வந்தடைந்தது. இதையொட்டி நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சியில் கொட்டவாத் மேயர் ஜோதியை ஏற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

கொரோனா காரணமாக மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடத்தப்படும் 32வது ஒலிம்பிக் போட்டியில் 200 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேலான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்துள்ளன. அவர்களுக்கு நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 119 வீரர் வீராங்கனைகள் உள்பட 220 பேர் கொண்ட குழு ஒலிம்பிக்கில் பங்கிருக்கிறது. ஏற்கனவே 90 க்கும் அதிகமான இந்திய குழு டோக்கியோ சென்றுள்ளது.

தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, நீச்சல், வில்வித்தை, மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்ட 33 வகையான விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே சில பிரிவு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டது போட்டி ஏற்பாட்டாளர்களை கலக்கமடைய செய்துள்ளது. வீரர், வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் உட்பட இதுவரை 70க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

Share This Article
Exit mobile version