Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறையாகும்.
ரிசர்வ் வங்கி ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறியுள்ளது.
தொழில்நுட்ப முறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதால் வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் என்.இ.எப்.டி(NEFT) முறையிலான பண பரிவர்த்தனை எந்த விதமான தடையுமின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.