- Advertisement -
Homeசெய்திகள்முதலமைச்சர் தலைமையில் கோவையில் 123 பேருக்கு திருமணம்

முதலமைச்சர் தலைமையில் கோவையில் 123 பேருக்கு திருமணம்

- Advertisement -

ஏழை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் ஜெயலலிதா என கோவையில் திருமண விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினர்.

கோவை பேரூரில் 123 ஜோடிக்கு இலவச திருமணத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்று நடத்தி வைத்தனர். திருமண நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.

ஏழை மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் ஜெயலலிதா. அம்மா திருமண உதவி திட்டத்தின் கீழ் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைத்துள்ளார்கள். மணமக்களுக்கு சீர்வரிசை கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான் என்றும், சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக, நமக்கு சாதி, மதம் பேதமில்லை.

காற்றில் பறக்கவிடும் வாக்குறுதிகளை கொடுப்பது திமுக தான் என்று கூறினார். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எல்லா வளமும் இறைவன் மூலம் கிடைக்கும் என்று பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , ஏழைமகளுக்கு உதவி, தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அதிமுக மட்டும் தான். சிலர் மற்றவர்களிடம் பிடுங்கி தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை நடத்தி வருகிறார். பாஜக, அதிமுக கூட்டணி தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளாக இருந்த திமுக – காங்கிரஸ் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று அவர் பேசினார்.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -