செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

Selvasanshi 1 View
1 Min Read

இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள செப்டம்பர் மாதத்தில் வங்கிகள் சுமார் 12 நாட்கள் வரை செயல்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலில் வார இறுதி நாட்கள், மத நிகழ்வுகள் மற்றும் பண்டிகை விடுமுறைகளும், மாநிலங்களுக்கான விடுமுறைகளும் அடங்கியுள்ளது. இந்த விடுமுறை நாட்களை நினைவில் வைத்து, வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. RBI-யின் உத்தரவு படி வரும் செப்டம்பர் மாதத்திற்கான முழு விடுமுறை நாட்களின் விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி

செப்டம்பர் 5 ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை.
செப்டம்பர் 8 ஆம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி நாள் அன்று கெளவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.
செப்டம்பர் 9 ஆம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 10 ஆம் தேதி – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 11 ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை
செப்டம்பர் 12 ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை.
செப்டம்பர் 17ஆம் தேதி – கர்ம பூஜை காரணமாக ராஞ்சியில் வங்கிகள் செயல்படாது.
செப்டம்பர் 19 ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை.
செப்டம்பர் 20 ஆம் தேதி – இந்திரஜத்ரா பண்டிகையின் காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் இயங்காது.
செப்டம்பர் 21 ஆம் தேதி – ஸ்ரீநாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.
செப்டம்பர் 25 ஆம் தேதி – நான்காவது சனிக்கிழமை
செப்டம்பர் 26 ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை

Share This Article
Exit mobile version