கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டன.
இதையடுத்து கடந்த மாதம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சேவைகள் அனைத்தும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மேலே குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் வழிமுறைகளை பின்பற்றி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.