- Advertisement -
Homeஆன்மிகம்108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றிகள் | 108 Ragavendhra potri

108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றிகள் | 108 Ragavendhra potri

- Advertisement -

 108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றிகள்

ஸ்ரீ ராகவேந்திரருக்கு உகந்த இந்த
“குரு போற்றி”யை “தினமும்” சொல்லி வர,
நிச்சயம் பலன் உண்டு.

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பக விருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி

ஓம் சங்குகர்ண தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் வியாஸராஜரே போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திர குருவே போற்றி
ஓம் பக்தி ஸ்வரூபனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவரே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் வேத கோஷ பிரியரே போற்றி

ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்வமத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கண்கண்ட குருவே போற்றி

ஓம் நல்லோரைக் காப்பவரே போற்றி
ஓம் தீயோரை திருத்துபவரே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி

ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவரே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் பக்தப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஓம் மெய்ஞ்ஞானத்தை தருபவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

ஓம் ஆனந்த நிலையமே போற்றி
ஓம் காஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களைத் தருபவரே போற்றி
ஓம் ஹயக்ரீவ வாக்கே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையா தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் வாதங்களில் வென்றவரே போற்றி
ஓம் “பரிமள” நூல் இயற்றியவரே போற்றி

ஓம் தமிழ்நாட்டில் பிறந்த குருவே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மாஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

ஓம் சுகங்களை தருபவரே போற்றி
ஓம் பேராசைகளை வேரறுப்பவரே போற்றி
ஓம் அன்னதானப் பிரியரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அள்ளித் தருபவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் சகல ஐச்வர்யங்களை தருபவரே போற்றி
ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஓம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஓம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா குருவே போற்றி

ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் மூலராமரை இன்றும் பூஜிப்பவரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாக மூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி

ஓம் பிருந்தாவனத்துக்குள் அமர்ந்தவரே போற்றி
ஓம் இன்றும் எங்களுடன் வாழ்பவரே போற்றி
ஓம் கண்ணனின் தாஸரே எங்கள் கண்ணுக்குத் தெரிவாய் போற்றி

ஓம் ஸ்ரீ ராகவேந்திர ஐயா உந்தன் காட்சி தருவாய் போற்றி போற்றி…

 

108 Ragavendhra potri |

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -