தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுயுள்ளார்.
கொரோனா முயற்சிகளுக்கு மக்கள் அனைவரும் நீதி வழங்குமாறு முதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இன்றுவரை 353 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அழைக்கப்படும் நன்கொடையை கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் திரவமருந்து ஆக்சிஜனை வாங்கவும், கொரோனா மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.