ஹைலைட்ஸ்:
- சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனமானது மே 15ம் தேதிக்கு பிறகே தடுப்பூசிகளை வழங்க முடியும்.
- 18இல் இருந்து 44 வயது வரை பூர்த்தியானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
- ஒரே நாளிலேயே, சுமார் 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் 45 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படு வந்த நிலையில், மே ஒன்றாம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது வரை பூர்த்தியானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதற்காக, கோவின், ஆரோக்ய சேது மற்றும் உமாங் செயலி மூலம் நேற்று மாலை 4 மணிக்கு முன்பதிவு தொடங்கி வந்த நிலையில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால், மூன்று தளங்களும் முடங்கி போயின அதனால் OTP வருவதற்கு தாமதம் ஆனது பின்பு கோளாறு சரி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மத்திய அரசானது தகவலை வெளியிட அடுத்த நாளிலேயே, சுமார் 1 கோடியே 33 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாநில அரசும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியான முறையில் தடுப்பூசியை கொள்முதல் செய்ய உள்ளதால், தற்போது வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மையங்கள் இறுதி செய்யப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் பல பகுதிகளில் குறிப்பாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனமானது மே 15ம் தேதிக்கு பிறகே தடுப்பூசிகளை வழங்க முடியும் என்ற ஒரு திடீர் அறிவிப்பை தெரிவித்துள்ளது.எனவே திட்டமிட்டபடி மே ஒன்றில் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.