பூவரசு மரம் பயன்

sowmiya p 2 Views
1 Min Read

பூவரசில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கொட்டைப் பூவரசு மற்றொன்று சாதாரணபூவரசு என்பதாகும். மருத்துவத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்துவது கொட்டைப் பூவரசு ஆகும். பூவரசு குடலிலுள்ள புழுக்களைக் கொன்று குடலை நலமாக வைப்பதில் முதன்மை பெற்றதாகும்.

வெள்ளைப்படுதலை அகற்ற:-

  • சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை தேவையான அளவு தினசரி உள்ளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் உடனடியாக வெள்ளைப்படுதல் குணமாகும்.

சரும நோய்களுக்கு:-

  • பூவரசன் வேரைக் கொண்டுவந்து நன்றாகக் கழுவி அம்மியில் வைத்து அரைத்து எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித சரும நோயாக இருந்தாலும் காலை இரவு இருவேளை தினசரி தேய்த்துவந்தால் விரைவில் சரும நோய் அகன்றுவிடும்.

வீக்கங்களுக்கு:-

  • உடலில் எங்காவது வீக்கமாக இருந்தால் பூவரசு இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து மெழுகாக அரைத்து சூடு செய்து வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வீக்கம் குறைந்துவிடும்.

எந்தப் பூச்சிக் கடித்தாலும்:-

  • நமது உடலில் எந்தப் பூச்சிக் கடித்தது என்று தெரியாமல் தொந்தரவுக் கொடுத்தால் அதனைச் சரிப்படுத்திக் கொள்ளக் கீழ்க்காணும் முறையைக் கையாளலாம்.
  • பூவரசு மரப்பட்டை 250 கிராம் சேகரித்துக் கொண்டு கல்வத்திலிட்டு நன்றாக இடித்து ஒரு சட்டியில் போட்டு 1500 மில்லி நீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

காமாலை நோய்க்கு:-

  • காமாலை நோய் வந்தால் சிலர் மிகவும் பயந்துவிடுவார்கள், காரணம், சில சமயம் உயிரிழப்புக் கூட நடந்துவிடும். ஆதலின் உடனடியாகக் காமாலை நோய்க்கு வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.
  • பூவரசு இலைக் கொழுந்தைக் கொண்டு வந்து அதனுடன் சந்து பிளகு சேர்த்து மெழுகாக அரைத்தெடுத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்துப் பாம்மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு காலை, பகல், மாலை என மூன்று வேளைகள் சாப்பிடவும்.
Share This Article
Exit mobile version